சென்னை நகர் முழுவதும் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், சென்னை விடியவிடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னை நகரின் பல இடங்களில் இரவில் கனமழை பெய்தது. விடிய விடிய இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version