வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Discussion about this post