தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதால் குமரி கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version