அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும், மழையினால் 3 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையினால் 13 ஆயிரத்து 268 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் 2 நாட்களில் அபாய எல்லையை எட்டும் எனவும், பல இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.