மாநகரப்பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3பேர் கைது

சென்னை சென்ட்ரல் அருகே மாநகரப்பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட புதுக்கல்லூரி மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இச்சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மந்தவெளியில் இருந்து பிராட்வேயில் இருந்து வரக்கூடிய 21 என்ற மாநகரப் பேருந்து இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் அருகே வரும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் கலாட்டாவில் ஈடுபட்டனர்…
 
அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்ட பொழுது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை முழுமையாக உடைத்தனர். இதனையடுத்து மாநகரப் பேருந்து ஓட்டுநர் பாலாஜி என்பவர் சென்னை பூக்கடை காவல்
நிலையத்தில் புகார் அளித்தார்…
 
பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் லட்சுமணன் தீவிர விசாரணை மேற்கொண்டுடார். இந்த நிலையில் பேருந்து கலாட்டாவில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களான மாதேஷ் வயது 17 முதலாம் ஆண்டு பி ஏ, சூர்யா வயது 19 இரண்டாம் ஆண்டு ஜூவாலஜி, இஸ்மாயில் வயது 19 மூன்றாமாண்டு ஆங்கிலம் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்…
 
மாநகர காவல்துறை சார்பில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு செய்து வந்தாலும் சில மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்று கத்தியைக் கொண்டும் பேருந்து தினம் என்ற பெயரிலும் ரயில் தினம் என்ற பெயரிலும் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர்…
 
குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியலை காவல்துறையினர் தயார் செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version