கொளத்தூரில் துணை ஆட்சியர் வீட்டில் திருட்டு: 3 பேர் கைது

சென்னை கொளத்தூரில் துணை ஆட்சியர் வீட்டில் 100 சவரன் நகையை கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் கொளத்தூரில் துணை ஆட்சியராக பணிபுரியும் அல்லி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டு உடைத்து நகைகள் கொள்ளையடிக்கபட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் கொள்ளையனை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், தங்கமணி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து தங்கமணி பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், குமரேசன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம்  பணத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version