மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல நாம் வாழ்வியலிலும், நடைமுறையிலும் பல மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. ஒரு காலத்தில் ரேடியோ மூலம் பாடல்களையும், செய்திகளையும் கேட்டுகொண்டும் தெரிந்து கொண்டும் வந்தோம் காலங்கள் மாற மாற தொலைக்காட்சி வழியாக செய்திகள், படங்கள் என காட்சி பூர்வமாக்கப்பட்டது. காலப்போக்கில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்களிடையே டிவி பார்க்ககும் பழக்கமும் ஆர்வமும் குறைந்து உள்ளதாக ஆய்வாலர்கள் கூறுகின்றனர். பல மக்களின் கைகளில் ஏறத்தாழ ஆறாம் விரலைப் போல செல்போன்கள் தவழத் தொடங்கிவிட்டது என்று கூட சொல்லலாம். மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், செய்திகளையும் செல்போன் மூலம் தெறிந்து கொள்கின்றனர். தற்போது பல்வேறு தகவல்களை வெளியிடுவது தங்களின் கருத்துக்களையும், அவர்களின் படைப்புக்களையும் பதிவிடுவது என பலரும் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துகின்றனர்.
த்ரெட்ஸ்…!
இதனால் அவர்கள் பிரபலமடையவும் செய்கிறார்கள். இந்த வகையில் செல்போனில் மட்டுமல்லாமல் செல்போன் ஆப்(app)களும் புதுப்புது சமூக வலைதளங்களை அறிமுகபடுத்தி வருகிறது. ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் எல்லா சமூக ஊடகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் சமூக ஊடகங்களில் ட்விட்டருக்கு பதிலாக மெட்டா நிறுவனம் ’’த்ரெட்ஸ்’’ என்ற புதிய சமூக வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் செயல்பாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சார்பில் த்ரெட்ஸை வெளியிட்டது.
8 மில்லியன் யூசர்களைக் கடந்து…!
இந்த த்ரெட்ஸ் மக்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் கிளை செயலியாக இந்த புதிய சமூக வலைத்தளம் செயல்படும், என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. இது பார்ப்பதற்க்கு ட்விட்டர் போலவே தோற்றம் கொண்டாலும் த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. மெலும், இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்தது த்ரெட்ஸ் நிறுவனம். ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.