ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சோழீஸ்வரர் கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால கோயில் உள்ளது. இந்த கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெற்றது. ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மல்ல சமுத்திரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், பின்னர் நிலையை அடைந்தது. தேர் திருவிழா நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
Discussion about this post