தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிபிஐ விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை துவக்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான தனது விசாரணையை சிபிஐ துவக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்ப்டடுள்ளன.

சம்பவத்தில் போலீசார் பயன்படுத்திய 15 துப்பாக்கிகள் குறித்த ஆவணங்களையும் சிபிஐ சேகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

Exit mobile version