தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பராமரிப்பு இன்றி கிடந்த வீடு மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், அங்குள்ள அண்ணா நகர் பகுதியில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பராமரிப்பு இன்றி கிடந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, டெங்கு கொசு ஒழிப்பிற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டாலும், பொதுமக்கள் புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post