பெண்களுக்கு சம உரிமை , பெண் முன்னேற்றம், பெண்கள் நாட்டின் கண்கள் மற்றும் இன்னபிற இத்யாதி இத்யாதிகள் என்று மேடைக்கு மேடை முழங்கும் திமுக தன் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.கருணாநிதி இல்லாத காரணத்தால் இதை திறமையாக மறைக்கும் திறமையை திமுக இழந்துள்ளது.நாடெங்கும் நாங்கள்தான் 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தோம் என தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது திமுக.
ஒருமுறை கேள்வி எழுந்தபோது உடனே மாற்றி உள்ளாட்சித் தேர்தலை 33 % இட ஒதுக்கீட்டுடன் நடத்தியது நாங்கள்தான் என்றார் . இல்லையென்று சொல்லமுடியுமா?இந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. 40 வேட்பாளர்களில் 2 பேர்தான் பெண்கள்.போதாத குறைக்கு காங்கிரஸ் வேறு. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது காங்கிரஸ் என்று குஷ்பூ சுந்தர் ஊரூராய் பிரசாரம் செய்தது நினைவிருக்கிறதா?
இப்படி பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி வாய் கிழிய பேசிய திமுக என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் கட்சியில் அதிக அளவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் அல்லவா? அது தான் இல்லை. 2 பெண்களுக்கு மட்டும் தான் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஒருவர் குடும்ப உறுப்பினர், ஒருவர் நண்பரின் மகள்.
இந்த 2 வேட்பாளர்களும் கூட வேறாருமல்ல. ஒருவர் கனிமொழி (தூத்துக்குடி தொகுதி) ,மற்றொருவர் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன்(தென் சென்னை தொகுதி). ஏதோ பெண்களுக்கும் கொடுக்க வேண்டுமே என்று பேருக்கு கொடுத்துவிட்டு நீங்களே பெண்களின் உரிமை பற்றி பேசுவதா?
திமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகளிர் தின வாழ்த்து செய்தியில் சொன்னது பெண்களை ஏமாற்றும் வேலையா?
மொத்தத்தில் ஸ்டாலின் பாணியில் சொல்லுவதென்றால் தொட்டிலையும் கிள்ளிவிட்டு பிள்ளையையும் ஆட்டுவதா?