இந்த விடியா ஆட்சியில போக்குவரத்து துறையோட செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் சிரிப்பா சிரிச்சிக்கிட்டு இருக்கு. பஸ்சுக்குள்ளயே மழை பெய்றது… அங்கங்க பேருந்து நின்னு போறதுன்னு தெனமும் ஏதாவது ஒரு சம்பவம் தமிழ்நாட்ட சுத்தி நடந்துக்கிட்டேதான் இருக்கு… இப்பக்கூட பாருங்க சென்னையில இருந்து சேலத்துக்குப் போன சொகுசு பேருந்து ஒன்னு ஆத்தூர் பக்கத்துல பழுதாகி நின்னுருக்கு. அதுவும் குறுகலான சாலையில போய் நின்னுட்டதால பயங்கர போக்குவரத்து நெரிசலா ஆகியிருக்கு.. காலையிலயே ஸ்கூல் போறவங்க, ஆபீஸ் போறவங்கன்னு பலரும் காண்டாகி இருக்காங்க… அப்புறமா தள்ளுமாடல் வண்டி மாதிரி அத தள்ளிக்கிட்டு போய் ஓரம் கட்டி போக்குவரத்த சீர் பண்ணியிருக்காங்க..
((GV00AMLS)) கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில இருந்து ஆவடி வரைக்கும் இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீர்னு பழுதாகி நின்னு போக பயணிகள் இறங்கி தள்ளிக்கிட்டு போயிருக்காங்க.
பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்னு சொல்லிட்டு இப்படி தள்ளுமாடல் பேருந்தா விடுறீங்களே… இது திராவிட மாடல் அரசா? அல்லது தள்ளுமாடல் அரசான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.