தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் இருப்பதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் இவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆழ் துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளது என்று தெரிவித்தார்.
Discussion about this post