தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளருமான கந்தசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார். பிரசார கூட்டங்களை இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும், பிரச்சார கூட்டம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்னரே கட்சி நிர்வாகிகள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் இதில் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post