திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை, நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள பெரியகுப்பம் மற்றும் வரதராஜநகரில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இதனிடையே, வரதராஜநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள், ரயில் நிலையம் அருகில் உள்ள பாதையை வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இப்பாதையை அடைத்து தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு வருவதால், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை நகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் இடித்து அகற்றினர்.
இந்நிலையில், முதல் தர வீட்டு வரி மற்றும் பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் அரசுக்கு செலுத்தி வருவதாகவும், வீடுகளை அகற்றுவதில அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் முறையான பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post