நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் மூலமாக தங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும், அதை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் தெரிவிப்போம் என்றும் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளில் சட்டம், ஒழுங்கு மற்றும் தேர்தல் சூழல் உள்ளிட்டவை ஆராயப்படும் என்று கூறிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரத்துடன், யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் விவிபாட் கருவி பயன்படுத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.