நெல்லையில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வு பணியில் புலி என பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமத்தில் நம்பியாற்றுப்படுகையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ”புலி” என பொறிக்கப்பட்ட கருப்பு – சிவப்பு பானை ஓடு கிடைத்துள்ளது. இதன் மூலம் நம்பியாற்றுப்படுகையில் எழுத்தறிவு உள்ள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும்
புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.