திருக்குறளை அனிமேஷன் வடிவில் குழந்தைகளிடம் கொண்டு செல்லும் போது திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும் என உளவுத்துறை காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உளவுத்துறை காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு கலந்து கொண்டார். அப்போது, திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் திருநாவுக்கரசு, திருக்குறளை உலக மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
குழந்தைகளிடம் திருக்குறளை கொண்டு செல்வதற்கு செய்யுளாக இல்லாமல் கதைகளை கூறும் அனிமேஷன் வடிவில் திருக்குறளை கொண்டு சென்றால் திருக்குறளை குழந்தைகளிடம் பதிய வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.