தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்ப லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Discussion about this post