கோவை செட்டிபாளையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சங்கம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
செட்டிபாளையம், எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில், ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்கென கடந்த 8 ஆம் தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் பூஜையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கால்கோல் நட்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, தமிழகத்திலேயே மிகப் பெரிய கேலரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 900 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். மாடுபிடி வீரர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போட்டிக்கு அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில், மருத்துவம், ஆம்புலன்ஸ், பேருந்து, கழிப்பறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வெற்றி பெறும் அனைத்து வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் தங்க காசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post