சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த கொள்ளையர்கள் கைது

சென்னை செம்மெஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

செம்மெஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாகவழக்குகள் பதிவாகி வந்தன. இந்நிலையில், செம்மெஞ்சேரி காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். குமரன் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நந்தகுமார், முருகன், ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் தங்களது நண்பர்களான பூபாலன் மற்றும் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version