திருவாரூரில் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற, வலது பாத தரிசனம் நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சைவ மதத்தில் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி ஆருத்ரா பூஜையும் தொடர்ந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜர் தனது வலது பாதத்தை காட்டி அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்ச்சையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்தனர். முன்னதாக தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை மற்றம் அபிஷேசம் நடைபெற்றது.
Discussion about this post