பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரக்சிட் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே மேற்கொண்டார்.
இது தொடர்பாக 2018-ம் ஆண்டு வரைவு உடன்படிக்கை மீது நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெர்மி கோர்பைன், தெரசா மே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 325 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 306 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் தெரசா மேக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.