தமிழகம், புதுவையில் 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 மற்றும் 4-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்பகுதியில் காற்றின் வேகம் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post