தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆட்குறைப்பு கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 18-வது சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கூடாது என்றும், மேம்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், இதுவரை தகவல் தொழில்நுட்பத் துறையில் 6 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.