ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லை – மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங்

ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்க மாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், ஆய்வு குழுவின் ஆய்வறிக்கை இல்லாமல், எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் வழங்க மாட்டோம் என்றும் அந்த ஆய்வுக்குழுவில் 2 பேருக்கு குறையாமல் இருப்பார்கள் எனவும் கூறினார். அதில் ஒருவர் கல்வியாளராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்த பிறகு தான், சி.பி.எஸ்.இ இணைப்பு அனுமதி வழங்கப்படும் என்றும் சத்யபால் சிங் கூறினார்.

Exit mobile version