சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் சென்னை மண்டலத்தில் 92.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள் மற்றும் 12.9 லட்சம் மாணவியர்கள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர். இதில் மொத்தமாக 79.4 % மாணவர்கள் மற்றும் 88.70% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

98.2% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. 92.93% மாணவர்கள் தேர்ச்சியுடன் சென்னை 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version