சேலம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று முறை மூலம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பி விடும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சரபங்கா நீரேற்ற திட்டம் 11 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு ஏரிகள் நிரப்பப்படும் என்று கூறினார். திட்டத்தை அறிவித்து விட்டு மக்களை ஏமாற்றும் அரசு அதிமுக அரசு இல்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 630 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.