தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Exit mobile version