திராவிட மாடல் அல்ல.. திருடர்களுடைய மாடல் இது! – எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!

விலைவாசி உயர்வையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கைப் பிரச்சினையை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி சிவி சண்முகம் அவர்கள் பேசியது பின்வருமாறு உள்ளது.

எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!

இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் விடியலைத் தருவோம், வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம், விலைவாசியை குறைப்போம் என்று சொல்லி திமுக ஆட்சியைப் பிடித்தார்கள். சொத்து வரியை உயர்த்த மாட்டோம், மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம், எந்த வரியையும் உயர்த்தமாட்டோம் என்று சொன்ன முக ஸ்டாலின் தெளிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லமாட்டோம். அவரை சில சக்திகள் இயக்கிக்கொண்டு இருக்கின்றன.  பொம்மை முதலமைச்சர் முக ஸ்டாலினை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிற சக்திகள் இந்த மாடலை திராவிட மாடல் அல்ல, திருடர்களுடைய மாடல் அரசாக வைத்துள்ளது. மூன்று ஆண்டுகள் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்களின் வேசம் படிப்படியாக மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. இந்த கேடுகெட்ட, செயல்படாத திமுக ஆட்சியில், தவறுகளை மூடி மறைத்தாலும் களைந்து கொண்டிருக்கிற காட்சி உள்ளது. இந்த ஆட்சியை புழல் சிறைக்கும், திகார் சிறைக்கும் அனுப்புவதற்கான காலம் தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி, பொன்முடி, கவுதம சிகாமணி, அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி பிறகு முக ஸ்டாலினின் கழுத்தைப் பிடிக்கும். திமுகவிற்கான முடிவுரையின் தொடக்கு உரையானது எழுதப்பட தொடங்கிவிட்டது.

 

 

 

Exit mobile version