நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூரில் உள்ள ராஜரத்தினம் நகரில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். சுதாகர் என்பவரின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க பிரபாகர் முயற்சித்தபோது மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதேபோன்று, ஆசிரியர் ரேவதி மற்றும் ஜோஸ் என்பவரது வீட்டில் இருந்து 30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
Discussion about this post