மாந்தீரீகம் செய்து பல இளம்பெண்களை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஐபி கோயிலைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், இதே பகுதியை சேர்ந்த அபிரமி என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பாலாஜி திருமணம் செய்துள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும் முதல் மனைவி அபிராமிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்க்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மந்தீரிகம் செய்து இதுவரை 4 இளம்பெண்களை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.