கரூரில் இரு சக்கர வாகனங்களை திருட முயன்ற வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகவே இரு சக்கர வாகனங்கள் மர்மமான முறையில் காணாமல் போனது. இந்நிலையில், அங்குள்ள பள்ளிவாசல் முன்பு வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தினை திருட முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்தனர். பின்பு அவரை பிடித்து விசாரித்ததில் இரு சக்கர வாகனங்களை திருட வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து விசாரித்ததில், அவர் பெயர் செல்வம் என்றும், கடந்த பல தினங்களாகவே, நகரில் இருசக்கர வாகனங்களை திருடிவந்ததாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் செல்வம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post