நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடைவீதியில் காட்டு யானை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கூடலூர் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆண் யானை ஒன்று, கடைவீதிக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்தோர் அலறியடித்து ஓட்டமெடுத்தனர். சிலர் யானையை படம் எடுக்க முயன்றனர்.
இதையடுத்து அங்கிருந்த மக்களை சற்றுநேரம் உற்று நோக்கிய யானை, யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Discussion about this post