காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,043 கன அடியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு சீராக இருப்பதால், காவிரி நிர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக சீராக இருந்து வருகிறது. அதன்படி அணையின் நீர்வரத்து 6 ஆயிரத்து 43 கனஅடியாகவுள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
Discussion about this post