சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஆதார ஏரிகள் அனைத்தும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 20-ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
சோழவரம் ஏரியின் நீர் அளவு 69 கனஅடியிலிருந்து 116 கனஅடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் நீர் அளவு ஆயிரத்து 5 கனஅடியிலிருந்து ஆயிரத்து 58 கனஅடியாக உள்ளது. செம்பரபாக்கம் ஏரியின் நீர் அளவு 166 கனஅடியிலிருந்து 194 கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரியின் நீர் அளவு 460 கனஅடியிலிருந்து 948 கனஅடியாக அதிகரித்துள்ளது.