சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வலுத்து வரும் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் விசாரணையை சந்திக்க ஏதுவாக, கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று குவுன் தோங் தொழிற்பேட்டையில் நடைபெற்ற போரட்டத்தில் ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்கள், பாட்டில்கள் மற்றும் மூங்கில் தடிகளை காவல்துறையினர் மீது வீசி எறிந்தனர். கலவரத்தை அடக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.