பயணி தவறவிட்ட ரூ.82 ஆயிரம் பணம் உடனடியாக மீட்பு

ரயிலில் தவறவிட்ட 82 ஆயிரம் ருபாய் பணத்தை உடனடியாக மீட்ட ரயில்வே காவல்துறையினர் உரிய பயணியிடம் ஒப்படைத்தனர்.

திருச்சியில் இருந்து மங்களூரு விரைவு ரயில் மூலம் குடுப்பத்துடன் சீரடி செல்வதற்காக சென்னை வந்த ஜெயராமன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை தவறவிடடார். எழுப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இதை அறிந்த அவர் தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் 5ம் நடைமேடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி தவறவிட்டுச் சென்ற கைப்பையை கைப்பற்றினர். இதையடுத்து, அதில் இருந்த 82 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆதார் அட்டை, சீரடி செல்வதற்கான ரயில் டிக்கெட்டுக்ளையும் பயணி ஜெயராமனிடம் அவர்கள் ஒப்படைத்தனர். புகார் அளித்தவுடன் விரைந்து செயல்பட்ட ரயில்வே காவல்துறையினருக்கு ஜெயராமன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version