முதுமலை புலிகள் காப்பகத்தில் பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக சாலையோர மர நிழல்களில் ஓய்வெடுக்கும் வனவிலங்குகள் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர் மழையின் காரணமாக நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் வன விலங்குகள் தேவையான உணவு, தண்ணீர் போன்றவை வனத்திற்குள் கிடைத்திருப்பதால், காலை, மாலை என இரு வேளைகளில் தான் வன விலங்குகளை சாலையோரங்களில் காண முடிகிறது. நண்பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக வெளியேறும் மான்கள், சிங்கவால் குரங்குகள், யானைகள் போன்றவை மரங்களின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுப்பது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு இடையூறு செய்ய கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.