நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டிற்கு பிறகு 9 இந்தியர்களை காணவில்லை என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது.நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை,” என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.இதனிடையே இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் குறித்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாக பிரதமர் நரெந்திர மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கு தனது இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டுள்ளார்
Discussion about this post