சபரிமலை கோயிலுக்குள் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி கிடையாது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஜயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பக்தர்கள் கோயிலின் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோயிலை நோக்கி முன்னேறி சென்ற ஆந்திர பெண் பத்திரிக்கையாளர் கவிதா உட்பட இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப தேவசம் போர்டு முடிவுசெய்துள்ளது.
மேலும் பக்தர்களின் எதிர்ப்பால் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்கள் நுழைய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பந்தள மன்னர் குடும்பம், பெண்கள் நுழைந்தால் கோயிலை மூடவும் முடிவு செய்துள்ளது. தொடர் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அம்மாநில ஐஜி ஸ்ரீஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.