வேலூர் மாவட்டம் வாழப்பந்தல் கிராமத்தில் முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த பக்தவத்சலேஸ்வரர் சுவாமி திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது.
சேதமைடந்த நிலையில் இருந்த இக்கோயிலை புதுப்பிக்க தமிழக அரசு சார்பில் 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த நிலையில் இக்கோயிலில் ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் குடமுழுக்குவிழா விமர்சையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கோயிலில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கலசங்களில் புனிதநீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post