மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன போர் டாங்கிகள் தயாரிக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக டிஆர்.டிஓ. இயக்குனர் வி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியின் 7வது பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன இயக்குனர் பாலமுருகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தாய் நாட்டை மறக்காமல் இந்த மண்ணிற்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தாய்மொழியிலேயே படித்து அந்த மொழியை நேசித்து வாழ வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன போர் டாங்கிகள் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே தயாராகும் என்று தெரிவித்தார். அர்ஜூன் மார்க் ஓன் போர் டாங்கிகள் 124 தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு உதவியுடன் அடுத்ததாக அர்ஜூன் மார்க் ஓன் ஆல்பா என்ற போர் டாங்கிகள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post