காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகளுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்குள் நுழையும் காவிரி ஆற்றில் கர்நாடகா தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக தமிழக அரசு 2015 -ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையிலும் கர்நாடகா, காவிரியில் கழிவு நீர் கலப்பதை உறுதி செய்தது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று நீதிபதிகள் பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் குறித்து எழுத்துபூர்வ அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளும் ஒரு வாரம் அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Discussion about this post