எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.
மேலும் சட்டப்பேரவைக் குறித்து பேசிய அவர், 35 ஆண்டுகாலமாக இருந்த சட்டப்பேரவை மரபுகளை தற்போதைய சபாநாயகர் மீறிவிட்டார் என்று பேசினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக பலமுறை சபாநாயகர் முறையிட்டுள்ளோம் இன்று காலையும் சபாநாயகரை சந்தித்து முறையிட்டுள்ளோம். உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்துள்ளது. சபாநாயகர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்க வேண்டும்
பொதுக்கணக்கு குழுத் தலைவர் பதவி எதிர்கட்சித்தலைவருக்கு வழங்கவேண்டும். ஆனால் இதுவரைக்கும் வழங்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் துரைமுருகனுக்கு வழங்கினோம். ஆனால் எங்களுக்கு அவர்கள் வழங்கவில்லை என்று பேசினார்.
அவர் பேசிய காணொளி கீழே உள்ள சுட்டியில் உள்ளது. சொடுக்கவும்!
Discussion about this post