கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணையில் சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என தெரிவித்தது. இதனிடையே, இன்று நடைபெற்ற விசாரணையில் போது, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முடிவை ஏற்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு கால கெடு விதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்த கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Discussion about this post