திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் படித்த சரத்குமார் என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். எலும்பு முறிவு மருத்துவம் பயின்று ஏழைகளுக்கு உதவுவதே லட்சியம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, தான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவனென்றும், தனது பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்துவருவதாக தெரிவித்தார். தனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்று கூறிய அவர், சிறுவயதில் இருந்தே அரசுப் பள்ளியில் படித்ததாகவும் அங்கு தனக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த பயிற்சியின் போது நீட் சம்பந்தமான புத்தகங்கள் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அதன் மூலமாகத் தான் தேர்வில் தேர்ச்சி அடைந்ததாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் தனக்கு மட்டுமல்லாது தன்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் இதன் மூலம் பெருமை கொள்வதாக தெரிவித்தார். இனி வரும் காலத்தில் எலும்பு முறிவு மருத்துவத்தில் நிபுணராகி ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார்.