சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதாரண வழக்காக மட்டுமே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சம்மேளனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி முன்பு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது. 17-ம் தேதிக்கு முன்பு விசாரணைக்கு வாய்ப்பு இல்லை என்பதால், சபரிமலை நடை திறப்பின் போது பெண்கள் அனுமதிப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version