இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதி அசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தாக்குதல் நடத்துவதற்கு முன் தீவிரவாதி அசாரின் நடவடிக்கைகள் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அதிகாலை 2.10 மணியளவில் அசார் சாமி உஸ் சலாம் மசூதிக்கு வருகிறார். அங்கு மூன்று மணி நேரம் காத்திருக்கு அவர் 4.42 மணியளவில் போலீஸ் வாகனம் வரும்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளார். பிறகு 5.42 மணியளவில் மசூதி திறந்ததும் வந்த அவர், மசூதிக்குள் செல்கிறார். அங்கு ஒருவருடன் பேசிவிட்டு தொழுகையில் ஈடுபட்டவர், பாதியில் அங்கிருந்து கிளம்பி, வேறு ஒரு இடத்தில் தனியாக தொழுதுவிட்டு, பின் அவர் தயாராகி, தாக்குதல் நடத்த கிளம்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இலங்கை போலீசார் சிசிடிவி காட்சிகள் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post