ராமாநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அதிகளவில் தள்ளு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமப் புறங்களில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்கள் தண்ணீர் குடங்களை தலைச்சுமையாக சுமந்து கொண்டு வருவார்கள். ஆனால், கால மாற்றத்தாலும், நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழலாலும் எளிய முறைகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கிராமப்புற உள்ள பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதற்காக அதிகளவில் தள்ளுவண்டியை பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் கொண்டு வரும் பணியை எளியமையாக கையாளும் விதமாக தள்ளுவண்டிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 குடங்களை எடுத்து செல்லும் வகையில் தள்ளு வண்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post